பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
02:04
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.இதை முன்னிட்டு சர்ச்களில் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மாலையில் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடந்தன. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது.விருதுநகர் துாய இன்னாசியார் ஆலயத்தில் மறைவட்ட அதிபர் பெனடிக் அம்புரோஸ்ராஜ், துணை பாதிரியார் சந்தியாகப்பன் தலைமையிலும், பாண்டியன்நகர் துாய சவேரியார் ஆலயத்தில் பாதிரியார் ஸ்டீபன் சேவியர், எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் இன்னாசிமுத்து, தாளாளர் ஜெரிலுாயிஸ், பொருளாளர் வின்சென்ட் தலைமையிலும், நிறைவு வாழ்வு நகர் துாய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ், ஆர்.ஆர்.நகர் துாய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பாதிரியார் அலெக்ஸ் ஞானராஜ், துணை பாதிரியார் பென்சிகர், சாத்துார் ஒத்தையால் குழந்தை இயேசு ஆலயத்தில் பாதிரியார் ஜெயராஜ் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.