திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பால்வண்ணநாத சுவாமி சன்னதி கொடிமரத்திற்கு அருகேயுள்ள நந்தீஸ்வரருக்கு அன்று மாலை பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின் பிரதோஷ நாயகன் சுவாமி சந்திரசேகரர் மேளதாளத்துடன் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் மூன்று முறை பவனி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. சனி பிரதோஷம் என்பதால் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியார், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.