பதிவு செய்த நாள்
08
ஏப்
2021
11:04
உடுமலை : யுகாதி பண்டிகையை முன்னிட்டு, உடுமலை திருப்பதி, ஸ்ரீரேணுகாதேவி புற்றுக்கோவிலில், சிறப்பு பூஜைகள் துவங்கியது.
உடுமலை பள்ளபாளையத்தில், ஸ்ரீரேணுகாதேவி புற்றுக்கோவில், உடுமலை திருப்பதி கோவிலையொட்டி அமைந்துள்ளது.இக்கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நேற்று துவங்கியது.புற்று சிறப்பாக, அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. வரும், 13ம் தேதி யுகாதி பண்டிகை நாள் வரை, நாள்தோறும், காலை, மாலையில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளது.