நவபாஷாணத்திற்கு இணையான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் 5.5 அடி உயரத்தில் செய்யப்பட்ட லிங்கம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தென்பொன்பரப்பியில் உள்ளது. இந்த லிங்கத்திற்கு சொர்ணபுரீஸ்வரர் என்று பெயர். லிங்கம் பதினாறு பட்டைகளாக செதுக்கப்பட்டு பிரம்மா மற்றும் விஷ்ணு பீடத்திற்கு மேல் கம்பீரமாக அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை தட்டி பார்த்தால் வெண்கல மணியோசை கேட்கிறது. இவரை வழிபட்டால் செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். காகபுஜண்டர் என்ற சித்தரின் ஜீவ சமாதி இங்குள்ளது.