நாகப்பட்டிணம் மாவட்டத்திலுள்ள கோனேரி ராஜபுரம் சிவன் கோயிலில் சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. இத்தலத்தில் மற்றுமொரு சிறப்பம்சம் ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை, கோயில் தல விருட்சமாக உள்ளது.