பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
04:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் ஸ்ரீ பாரதி நகரில் ஸ்ரீ வாராஹி மந்திர ஆலயம் உள்ளது. இங்கு சனீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. விழாவையொட்டி, இன்று மாலை, 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சனீஸ்வர ஹோமம், வாஸ்து சாந்தி நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு அஷ்டபந்தனம், சிலை பிரதிஷ்டை நடக்கிறது. நாளை காலை, 5:00 மணிக்கு மகா கணபதி பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை, 7: 30 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வரருக்கு விமான கலச தீர்த்தம் நடக்கிறது. தொடர்ந்து, 8:00 மணிக்கு மூலஸ்தான ஸ்ரீ சனீஸ்வரருக்கு கலச தீர்த்தம் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு தச தரிசனம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.