முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தில் சிலைக்காரி அம்மன் கோயில் பங்குனி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.இந்நிலையில் பக்தர்கள் பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர்.பின்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது.பக்தர்கள் பொங்கல், கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்தினார்கள்.மாலை 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. குல தெய்வமாக வழிபடும் மதுரை சிவகங்கை,புதுக்கோட்டை,விருதுநகர், உட்பட வெளிமாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.