பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
04:04
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில், குஞ்சப்பனை மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழா, கடந்த மாதம், 23 ம் தேதி கணபதி ஹோமத்துடன், பூச்சாட்டுடன் துவங்கியது. இதை எடுத்து அக்னி கம்பம் நடுதல், திருவிளக்கு பூஜை வழிபாடு, பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின்பு குண்டம் திறந்து, அதில் பூ வளர்க்கப்பட்டது.
பவானி ஆற்றிலிருந்து இசை மேளதாளம் முழங்க, அலங்காரம் செய்த அம்மன் சுவாமி, கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்பு காலை, 7:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி வெள்ளிங்கிரி சிறப்பு பூஜை செய்து, முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து உதவி பூசாரிகள் குண்டம் இறங்கினர். பின்னர் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் அனைவருக்கும் கைகளில் கிருமி நாசினி மருந்து தெளித்து, முகக்கவசம் வழங்கப்பட்டது. விழாக்குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.