பதிவு செய்த நாள்
10
ஏப்
2021
05:04
உத்தரகோசமங்கை: பங்குனி மாத பிரதோஷ விழா சிவன் கோயில்களில் விமர்சையாக நடந்தது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.
திருப்புல்லாணி கைலாசநாதர் கோயிலிலும், கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும், ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவில் சங்கரேஸ்வரன், மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரமுடையார் கோயில், சாயல்குடி கைலாசநாதர் கோயில், டி.எம்.கோட்டை செஞ்சடை நாதர் கோயில், மாரியூர் பூவேந்தியநாதர், பவள நிறவல்லி அம்மன் கோயிலிலும், பிரதோஷ விழா நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் பிரதோஷ பாடல்களை பாடினர். பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாதாந்திர பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.