வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்புற நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறையில் குவிந்திருந்த நிலையில், காலை 6.45 மணி முதல் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் சுமார் ஆயிரம் பக்தர்கள் மலையேறினர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதியில் பிரதோஷ வழிபாடு சிறப்புற நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. ஏப்ரல் 12 மதியம் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.