பழநி: பழநி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ரூ. 5.28 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.பழநியில் மலைக்கோயிலில் 57 நாட்களுக்கு பின் உண்டியல் எண்ணிக்கை இரண்டாவது நாளாக நடந்தது. இதில் 774 கிராம் தங்கம், 8354 கிராம் வெள்ளியும் கிடைத்தது. ரொக்கமாக ரூ. 2 கோடியே 45 லட்சத்து 71 ஆயிரத்து 320 மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 93 கிடைத்துள்ளது. இரண்டு நாள் எண்ணிக்கையில் மொத்தம் 1946 கிராம் தங்கம், 31,996 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 241 கிடைத்துள்ளது. ரொக்கமாக ரூ.5 கோடியே 28 லட்சத்து 58 ஆயிரத்து 880 கிடைத்துள்ளது. செயல் அலுவலர் கிராந்தி குமார் பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் அப்புகுட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.