பதிவு செய்த நாள்
10
ஏப்
2021
05:04
புதுச்சேரி : அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்கம் சார்பில், உருளையன் பேட்டை அய்யனார் நகர், 2வது குறுக்கு தெருவில் உள்ள கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரர் கோவிலில், பிலவ வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா நடந்தது.
வில்லியனுார் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமை தாங்கினார். சங்க அகில இந்திய துணைத் தலைவர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் பங்கேற்று பேசினார். பின், பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.பஞ்சாங்கத்தின் முக்கியத்துவங்கள் குறித்து பேசினர். கொரோனா தொற்று நோய் நீங்க கூட்டு பிரார்த்தனை நடந்தது. உலக நன்மை வேண்டி தேவாரம், திருவாசகம், கோளறு பதிகம் பாராயணம் நடந்தது.சங்க மாநில தலைவர்கள் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், சிவராம சிவாச்சாரியார், மாநில துணைத் தலைவர் திருஞானசம்பந்த சிவாச்சாரியார், மாநில செயலாளர் அர்த்தனாரி சிவாச்சாரியார், கொள்கை பரப்பு செயலாளர் சேது சுப்ரமணிய சிவாச்சாரியார், இணை செயலாளர் சபரீசன் சிவாச்சாரியார் பங்கேற்றனர். உலக நன்மை வேண்டி வழிபட்ட புஷ்ப சமர்ப்பண பிரசாதம் மற்றும் பஞ்சாங்க முதல் பிரதியை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க துணைத் தலைவர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் வழங்கினார்.