பதிவு செய்த நாள்
09
ஜூன்
2012
10:06
பாவூர்சத்திரம்:மயிலப்பபுரம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் விசாக திருவிழா 10 நாட்கள் நடந்தது.மயிலப்பபுரம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் மதியம் உச்சிகால சிறப்பு பூஜைகள் நடந்தது. 8ம் திருநாளில் மாலை 6 மணிக்கு பாவூர்சத்திரம் கணேஷ் தங்கமாளிகை உரிமையாளர் கருணாகரன் தலைமையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.9ம் திருநாளில் இரவு 7 மணிக்கு துரைராஜ் அன்னதானம் வழங்கினார். இரவு 9 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம் நடந்தது. 8.30 மணிக்கு மேல் கணேசர் சப்பரத்தில் அமர்ந்து சின்னக்குமார்பட்டி, வெங்கடாம்பட்டி, ராஜகுடியிருப்பு, தெற்கு மயிலப்பபுரம் வழியாக நையாண்டி மேள்துடன் கோயில் வந்தடைந்தது. 10ம் திருவிழா காலை 11 மணிக்கு செண்டாமேளத்துடன் பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு கோயில் வந்தது.மதியம் 12.30 மணி சுவாமிக்கு பாலாபிஷேகம், உச்சிகால சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், இன்னிசை, குறவன் குறத்தி நடனம், நையாண்டி மேளம், செண்டாமேளம் நடந்தது. முருகபெருமான் மயில் வாகனத்தில் கோயில் வளாகத்தை சுற்றிவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அதிகாலை 5 மணிக்கு வாணவேடிக்கை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.