தமிழ் புத்தாண்டு : ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2021 11:04
ராமேஸ்வரம்: தமிழ் புத்தாண்டு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லாக்கில் உலா வந்தனர்.
தமிழ் புத்தாண்டு யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் கோயிலில் காலை 11 மணிக்கு சுவாமி, அம்மன், பிரியாவிடை அம்மன் தங்க பல்லாக்கில் எழுந்தருளினர். கொரோனா பரவலால் சுவாமி, அம்மன் அக்னி தீர்த்த கடற்கரை செல்லாமல், கோயில் வளாகத்திற்குள் உள்ள சிவதீர்த்த குளத்தில் எழுந்தருளினர். பின் தீர்த்தவாரி சுவாமி நீராடி அங்கிருந்த பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி, அம்மன் உலா வந்தனர். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. இதில் கோயில் மேலாளர் சீனிவாசன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஸ்கார் கமலநாதன், பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.