பதிவு செய்த நாள்
18
ஏப்
2021
06:04
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கை தொகையாக, 40 லட்சம் ரூபாய் இருந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொது உண்டியலில், 38 லட்சத்து 65 ஆயிரத்து, 609 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 30 ஆயிரத்து, 369 ரூபாயும், கோசாலை உண்டியலில், ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து 577 ரூபாயும், வடவள்ளி பெருமாள் கோவில் உண்டியலில், 54 ஆயிரத்து 724 ரூபாயும் என, மொத்தம், 40 லட்சத்து, 76 ஆயிரத்து, 279 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. அதோடு, 49 கிராம் தங்கமும், 1,900 கிராம் வெள்ளியும் இருந்தது. இத்தொகை சோமயம்பாளையம், பாங்க் ஆப் இந்தியா கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது. கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் மருதமலை துணை ஆணையர் (பொ) விமலா ஆகியோர் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர். மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.