சிவகங்கை : சிவகங்கை அருகே வாணியங்குடி சாய்பாபா கோயிலில் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தது.இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை அடுத்து மண்டலாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கின. நேற்று காலை சாய்பாபா சன்னதியில் யாகசாலை அமைத்து சிறப்பு வேள்வி, யாகம் நடத்தினர். அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாய்பாபாவிற்கு பக்தர்கள் ஆரத்தி பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பூக்கள், சாக்லெட், பிஸ்கட் பிரசாதம் வழங்கினர்.