கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடக்கிறது.
இக்கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 21 நாட்கள் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு விழா, அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்துவது ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஆகமவிதிப்படி அம்மனுக்கு தினமும் அலங்காரம் செய்து சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடக்கிறது. தேங்காய் உடைப்பதும் நிறுத்தி வைக்கப்பட்டது.பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.ஏப். 20ல் துவங்கிய திருவிழா மே 11 வரை நடக்கிறது.