கொடைக்கானல், கொடைக்கானல் சத்யசாய் சுருதியில் சாய்பாபாவின் பத்தாம் ஆண்டு ஆராதனை விழா (நினைவு தினம் ) அனுசரிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான மலை கிராமங்களில் உள்ள எளிய 2000 குடும்பத்தினருக்கு அத்யாவசிய உணவுப் பொருட்களான அம்ருதகலசம் வாகனம் மூலம் அனுப்பப்பட்டது. மேலும் சுற்றுலா சார்ந்த குதிரைகளுக்கு உணவு தானியங்களும், குளிரை தாங்கும் பிரத்யேக கம்பள ஆடையும் வழங்கப்பட்டது. அத்யாவசிய பொருட்கள் வாகனத்தை கொடைக்கானல் டி.எஸ்.பி., ஆத்மநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சத்யசாய் நிறுவனங்களின் மாநில தலைவர் சுரேஷ், ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் விஜய கிருஷ்ணா, கொடைக்கானல் பொறுப்பாளர் மகேந்திர தவே கலந்து கொண்டனர். வழக்கமாக வளாகத்திலேயே ஏழை எளியோருக்கு கம்பளம் மற்றும் பொருட்களை வழங்குவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக தற்போது வீடுகளுக்கு இத்திட்டம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆராதனை விழாவை முன்னிட்டு பஜன் நடந்தது.