திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2021 03:04
திருமங்கலம்: மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்ததாக ஐதீகம் உள்ள திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது.
இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கிய திருமண நிகழ்ச்சியில் 8.40 மணிக்கு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருமணம் நடந்தது. மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர், பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் செய்திருந்தார். திருக்கல்யாண நிகழ்ச்சிகளை கோவில் அர்ச்சகர் சங்கர நாராயண பட்டர் மற்றும் குழுவினர் செய்தனர். டி.எஸ்.பி., வினோதினி இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருமங்கலம் எட்டு பட்டறை மாரியம்மன் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் இருந்த மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை திருமணம் காலை 8 45 மணிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட நடந்தது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., நகர பொறுப்பாளர் விஜயன் செய்திருந்தார்.