ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் செல்ல தடை விதித்ததால், ரதவீதி வெறிச்சோடி கிடந்தது. கோரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று இந்து அறநிலைத்துறை கோயில்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் வெளியூரில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் கிழக்கு ரத வீதியில் நின்றபடி கோயில் கோவில் ராஜகோபுரத்தை கண்டு தரிசித்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் கோயல் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது.