வெறிச் சோடிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2021 06:04
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. கோயில் ராஜகோபுரம் செல்லும் ரோட்டில் தடுப்புகள் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. ராஜகோபுர மண்டபம் மற்றும் மூலவர் எதிரில் உள்ள கோபுர மண்டப நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் வருகை தந்த ஒரு சில பக்தர்கள் மூலவர் சன்னதிக்கு நேராக நின்று சுவாமி கும்பிட்டு சென்றனர். பக்தர்கள் அனுமதி இல்லாமல் இருந்தாலும் வழக்கமான ஆகம விதிகளின்படி பூஜைகள் நடந்தன. பிள்ளையார் பட்டியைச் சேர்ந்த வள்ளியம்மை கூறுகையில், நாங்கள் தினசரி காலை விநாயகரை கும்பிட்டு இங்குள்ள எங்கள் கடைக்கு செல்வது வழக்கம். இன்று வேறு வழியில்லாமல் சன்னதிக்கு வெளியே நின்று கும்பிட வேண்டியதாயிற்று என்றார் வருத்தத்துடன்.