கடலுார் : முழு ஊரடங்கு காரணமாக திருவந்திபுரம் கோவிலுக்கு வெளியே திருமணங்கள் நடந்தன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடக்கும் பூஜைகளில் பக்தர்களை அனுமதிப்பதில்லை. இக்கோவிலில் நேற்று திருமணம் செய்ய ஏற்கனவே பலர் பதிவு செய்திருந்தனர்.இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வெளியே திருமணம் செய்து கொள்ள மணமக்கள் அனுமதிக்கப்பட்டனர். முக்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணங்கள் நடந்தன.