சாயல்குடி: சாயல்குடியில் உள்ள சதுரயுகவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஏப்.,23 அன்று கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு காலை 8:45 மணி அளவில் கோயில் விமான கலசத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. டி. எம்., கோட்டை வெங்கடேஸ்வர குருக்கள் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகம் செய்தனர். வேத பாராயணமும் திருமுறைப் பாராயணமும் பாடப்பட்டது. சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை வகித்தார். குறைந்த எண்ணிக்கையில் முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.