சூலூர்: கோவில்களில் பக்தர்கள் இன்றி, சித்ரா பவுர்ணமி பூஜைகள் நடந்தன. சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி தினத்தில், கோவில்களில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். வைரஸ் தொற்று பரவல் காரணமாக, நேற்று முதல் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று சூலூர் வட்டார கோவில்களில் பக்தர்கள் இன்றி சித்ரா பவுர்ணமி அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர்.