ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை தொழுகை முதல் மாலை தொழுகை வரை நோன்பு இருப்பர். சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல, தண்ணீர் குடிக்காமல், வேறு எந்த தீய பழக்கங்களிலும் ஈடுபடாமல் இருந்தால் தான் நோன்பு முழுமை பெறும். அமாவாசையை அடுத்த மூன்றாம் பிறை நாளில் ரம்ஜான் கொண்டாட்டம் நடக்கும். திடலில் ஒன்று கூடி தொழுகை நடத்துவர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறுவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை உடுத்தி மகிழ்வர். இந்த நோன்பின் முக்கிய அம்சமே மற்றவர்களின் துன்பம் பசியை உணர்ந்து உதவுவது தான். அதனால் ஏழைகளுக்கு உணவு, உடை கொடுப்பது மிக முக்கியம். கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழல் நிலவுகிறது. தொழுகையை வீட்டிலிருந்தே செய்யும் சூழலில் தற்போது மக்கள் உள்ளனர்.