Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை.. ... ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி மசூதி வரைபடம்: ஆணையத்திடம் சமர்ப்பிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி மசூதி வரைபடம்: ஆணையத்திடம் சமர்ப்பிப்பு

பதிவு செய்த நாள்

25 மே
2021
12:05

 அயோத்தி : அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கான வரைபடம், அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், ராமஜென்ம பூமி வழக்கில், 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அயோத்தியில் மசூதி கட்ட தனியாக, 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்க உத்தரவிட்டது.ராமஜென்ம பூமி பகுதியில் இருந்து, 24 கி.மீ., தொலைவில் உள்ள தானிப்பூர் கிராமத்தில், 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு, முஸ்லிம் வக்பு வாரியத்திடம் வழங்கியது. இந்த மசூதியை கட்ட, இந்தோ - -இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை முஸ்லிம் வக்பு வாரியம் அமைத்தது.இந்நிலையில், மசூதி கட்டுமானத்திற்கான வரைபடம், அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காக நேற்று சமர்ப்பிக்கப் பட்டது. ஒரே நேரத்தில், 2,000 பேர் வரை அமரும் வகையில், போதுமான இடத்துடன் இந்த மசூதி கட்டப்பட உள்ளது. இதனுடன், 300 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையும், சமூக சமையல் கூடம் ஒன்றும் இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளன. நம் நாட்டை கட்டமைக்க, முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் ஆய்வு கூடம் ஒன்றும் கட்டப்பட உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar