திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு வெளியிடப்பட்ட 72,000 டிக்கெட்டுகளும் 15 நிமிடங்களில் முன்பதிவு முடிந்தது.
திருப்பதி; திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அக்டோபர் 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று அக்., 7ம் தேதி காலை 10:00 மணிக்கு இணையதளத்தில் வெளியிட்டது. இந்த 6 நாட்களுக்கு வெளியிடப்பட்ட 72,000 டிக்கெட்டுகளும் 15 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டு முடிந்துள்ளது. மேலும் புரட்டாசி மாதத்தின் கடைசி வாரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அக்., 11 முதல் 20 வரை இந்த பத்து நாட்களுக்கு விஐபி இடைவேளை தரிசனம் மற்றும் சிறப்பு முன்னுரிமை தரிசனங்களை ரத்து செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த காலத்திற்கு விஐபி இடைவேளை தரிசனத்திற்கான பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.