கீழக்கரை: கீழக்கரை தட்டான்தோப்புத் தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக விழா நடந்தது.
மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் திரவியப்பொடி, சந்தனம், விபூதி உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, லட்சுமிபுரம், வைகை, சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு கோயில் நடை அடைக்கப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நிறைவேற்றப்பட்டது.