திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வசந்த உற்ஸவத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் இல்லாமல் கஜேந்திர மோட்சம் கோயிலினுள் இன்று நடக்கிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பெருமாள் கருடாழ்வார் வாகனத்தில் எழுந்தருளி முதலை வாயில் சிக்கிய யானைக்கு மோட்சம் அளிக்கும் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி ஐந்து நாள் உற்ஸவமாக வைகாசியில் வசந்தப்பெருவிழாவாக கொண்டாடப் படுகிறது. மே22ல் யாகசாலை பூஜை நடந்து, பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவியருக்கு காப்புக் கட்டி விழா துவங்கியது. வழக்கமாக 4ம் திருநாளில் மணிமுத்தாற்றில் பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்ருளி, இன்று காலை கஜேந்திர மோட்சம் நடைபெறும். கொரோனா தொற்றால் இந்த நிகழ்ச்சி ஆற்றில் நடைபெறாமல் கோயில் வளாகத்தினுள் இன்று காலை சம்பிரதாயமாக பக்தர்கள் இன்றி நடக்க உள்ளது.