எழுமலை: எழுமலை பேரூராட்சி 5 வது வார்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை மீறி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. எழுமலை வி.எ.ஒ., அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோயில் பகுதியில் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகள், தோரணங்களை அகற்றினர்.