கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட போது பூசாரிகளும் வெளியே இருந்ததால் உயிர்சேதமும் ஏற்படவில்லை.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப்பிரபலமான கோயில். பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது. 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு. இருமுடி கட்டி பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். தரையிலிருக்கும் ஸ்ரீ சக்ரம் மேல் புற்று வளர்ந்து கொண்டே வந்தது. காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு பிரசாதமாக புட்டமுது கொடுக்கப்படுகிறது.
மாசிப் பெருந்திருவிழா- 10 நாள் திருவிழா - 10 லட்சம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் இன்றி பூஜைகளை கோவில் பூசாரிகளே நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கு காலை தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்டபோது பூசாரிகளும் வெளியே இருந்ததால் தீ மளமளவௌ கூரை வரை பரவியது. இதில் கோவிலின் கூரைகள் முழுவதும் சேதமடைந்தது. தகவல் தெரிந்து, பொதுமக்கள், தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.