ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு ‘ராம கோடி’ என்று பெயர். இதற்காக தினமும் நீராடியதும் பக்தியுடன் எழுதுவது அவசியம். ராமகோடி எழுதுவதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்கள் தினமும் 1000 முறை ‘ராம்’ என்றோ ‘ஸ்ரீராமஜெயம்’ என்றோ எழுதினால் போதும். 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகி விடும். எழுதிய நோட்டுகளை ராமனாகவே பாவித்து பூஜையறையில் வைப்பது நல்லது. எண்ணிக்கையில் மட்டும் கவனம் வைக்காமல் பக்தியோடு எழுத அதுவே தவம். இப்படி செய்தால் 21 தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.