‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது முன்னோர் வாக்கு. பெரிய கோயில்கள் கட்டப்படாவிட்டாலும், குளக்கரை, ஆற்றங்கரை, ஊர்ச்சாவடி, முச்சந்தியில் விநாயகர் கோயிலாவது இருக்கும். சிவன், அம்பிகை, முருகன் என பல தெய்வங்கள் இருந்தாலும், முதற்கடவுள் என போற்றப்படுபவர் விநாயகர். கன்னிமூலை என்னும் தென்மேற்கு திசையில் இவரை பிரதிஷ்டை செய்வர். தெற்கு திசைக்கு ‘விநாயகர் திசை’ என்றும் விநாயகருக்கு ‘கன்னிமூலை கணபதி’ என்றும் பெயருண்டு.