திண்டுக்கல் : பழநி கோயில் சார்பில் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தினமும் 3000 உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி கோயில் சார்பில் பழநி மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கு தினமும் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தினமும் 2000 உணவு பொட்டலங்களும், பழநி அரசு மருத்துவமனைக்கு 200 உணவு பொட்டலங்களும் வழங்கப்படுகின்றன. மேலும் அடிவாரம் பகுதியில் வாழ்வாதாரம் இழந்தோருக்கும் தினமும் உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது. கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைகளுக்கு தினமும் 50, நத்தம் அரசு மருத்துவமனைக்கு 25 என தினமும் 3000 பொட்டலங்கள் வழங்கப்படுவதாக அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.