திருமங்கலம்: திருமங்கலம் உச்சப்பட்டி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் ஆன நிலையில், மண்டல பூஜை நேற்று நடத்தப்பட்டது. கோவில் அர்ச்சகர் பிரகாஷ் பட்டர் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. ராகு-கேது சமேத விநாயகர் தட்சிணாமூர்த்தி துர்க்கை வரசித்தி விநாயகர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் அழகேச பூபதி, செந்தில், நாகராஜ், தியாகராஜன், வெங்கடேசன், அரவிந்த், வேதாசரம் செய்து இருந்தனர்.