காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இல்லாமல் எளிய முறையில் கடந்த 21ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும்.22ம் தேதி பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் நடந்தது.நேற்று சிவபெருமான் அடியார் வேடத்தில் காவி உடை.ருத்ராட்சம் அணிந்து கைலாசநாதர் கோவிலில் உட்பிரகாரம் மட்டும் சுற்றிவந்தது.பின் கோவில் உற்பகுதியில் மாங்கனி இறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்சென்று அழைத்து அமுது படையல் நிகழ்ச்சி கைலாசாநாதர் கோவில் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில் இனிப்பு,பழங்கள் என பல்வேறு உணவுடன் மதியம் 12.15 மணிக்கு இறைவனுக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் எம்பலம்செல்வம், எம்.எல்.ஏக்கள் நாஜிம். நாகதியாகராஜன். சந்திரப்பிரியங்கா. கலெக்டர் அர்ஜூன்சர்மா. துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், அறங்காவலர் குழு தலைவர் கேசவன்.துணைத்தலைவர் ஆறுமுகம்,செயலாளர் பக்கிரிசாமி.பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.