அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆனி பிரமோற்சவ விழா 13 நாட்கள் நடக்கும். இதில், மீனாட்சி - சொக்கநாதர் திருக் கல்யாணம், தேரோட்டம் என நிகழ்ச்சிகள் நடக்கும். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வருடமும் விழா நடக்கவில்லை. இந்த வருடமும் கோயில் திறக்கப்படாததால், திருக்கல்யாணம் மட்டும் கோயிலுக்குள், எளிமையாக நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் தேவி மற்றும் பாபு, வினோத், செந்தில் ஆகியோர் செய்தனர்.