Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி பவுர்ணமி: எமதர்மர் கோவிலில் ... புதுப்பொலிவு பெற்று வரும் கண்டியம்மன் கோவில் வளாகம் புதுப்பொலிவு பெற்று வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொன்மை வாய்ந்த கொற்றவை வழிபாடு!
எழுத்தின் அளவு:
தொன்மை வாய்ந்த கொற்றவை வழிபாடு!

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
03:06

 உடுமலை : உடுமலை பகுதியில், கொற்றவை வழிபாடு சிறப்பு இருந்ததற்கான பல்வேறு புராதன சின்னங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடுமலை, நெகமம், பொள்ளாச்சி, மடத்துக்குளம் உட்பட பகுதிகள், 13ம் நுாற்றாண்டு வரை, சிற்றரசர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது.அப்போதிருந்த கோவில்களில், வழிபாடு மற்றும் இதர திருவிழாக்களுக்காக, ஏராளமான நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான, கல்வெட்டுகள், கடத்துார், சோழமாதேவி, கண்ணாடிப்புத்துார் உட்பட பல்வேறு கோவில்களில், கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.இதில், தொன்மை வாய்ந்த கொற்றவை தாய் வழிபாடு, கொங்கு நாடு பகுதியில், அதிகளவு இருந்தது கண்டறியப் பட்டுள்ளது.

சிற்றரசர்களுக்கு பிறகு பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், பல்வேறு இடங்களில், வீரகம்பங்கள் உருவாக்கப்பட்டு, தற்போதும், உயிர்ப்போடு வழிபாட்டில் உள்ளன.இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தொன்மையான கொற்றவை வழிபாடு குறித்து, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில், சமீபத்தில், உடுமலை அருகே, பண்ணைக்கிணறு கிராமத்தில், தனியார் விளைநிலத்தில், சிதிலமடைந்த கோவில், கொற்றவை வழிபாட்டுக்கான, சில புராதன சின்னங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், தென்கொங்கு நாட்டு பகுதியில், கரப்பாடி, களந்தை உட்பட இடங்களில், கொற்றவை வழிபாட்டுக்கான பல்வேறு புராதன சின்னங்கள், வரலாற்று ஆய்வாளர்களால், ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உடுமலை பகுதியில், இத்தகைய தொன்மை வாய்ந்த கொற்றவை வழிபாடு குறித்த ஆய்வுகள் தொடர்கிறது, என்றனர். பண்ணைக்கிணறு கிராமத்தில், சிதிலமடைந்து, காணப்படும் கோவில் மற்றும் அதிலுள்ள சிற்பங்கள் குறித்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில், பெண் குலதெய்வம் மற்றும் கொற்றவை வழிபாட்டையும், உறுதிப்படுத்துவதாக உள்ளது. இக்கோவிலின் சுற்றுப்பகுதியில், வீரகம்பம் மற்றும் மாலகோவில் வழிபாடு இன்றும் தொடர்கிறது.கொங்கு நாடு பகுதியில், காலங்காலமாக வழிபட்டு வந்த குலதெய்வ வழிபாட்டின் எச்சமாகவே இத்தகைய புராதன சின்னங்கள் இருக்கிறது, என ஜி.வி.ஜி., கல்லுாரி வரலாற்று பேராசிரியர் கற்பகவள்ளி தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்துார்;  திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று துலா உற்சவ கொடியேற்றம் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராசிபுரம்; நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி கவுசிக பாலசுப்பரமணியர் கோவிலில் சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. புதுச்சேரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar