பதிவு செய்த நாள்
01
ஜூலை
2021
01:07
பெங்களூரு : சாய் சத்ய சாய் பிரசாந்தி நிலையத்திலிருந்து, மேற்கு வங்கம் ஹவுராவுக்கு வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கப்படுவதாக, தென்மேற்கு ரயில்வே ஹுப்பள்ளி பிரிவு அறிவித்துள்ளது.
தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:ரயில் எண். 02689 ஹவுரா - சத்ய சாய் பிரசாந்தி நிலையத்துக்கு வாரந்தோறும் புதன்கிழமை மதியம் 2:44 மணிக்கு ஹவுராவிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 9:20 மணிக்கு சத்ய சாய் பிரசாந்தி நிலையம் வந்தடையும். இந்த ரயில் சேவை ஜூலை 7 ல் துவங்குகிறது.ஹவுராவிலிருந்து புறப்படும் ரயில் கரக்பூர், பாலசோர், புவனேஸ்வர், குர்தா சாலை, பெர்மாபுர், விஜியாநக்ரம், துவட்டா, விஜயவாடா, குன்டூர், நசரோபேட், மர்காபுர், கிட்டலுார், நந்தியால், தோன், கூடி, ஆனந்த்பூர், தர்மாவரம் வழியாக ஸ்ரீசத்ய சாய் பிரசாந்தி நிலைக்கு வந்தடையும்.
மறு மார்க்கத்தில் ரயில் எண். 02690, ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்திலிருந்து ஹவுராவுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை, 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:25 மணிக்கு ஹவுரா சென்றடையும். இந்த ரயில் சேவை ஜூலை 9 ல் துவங்குகிறது.சத்ய சாய் பிரசாந்தி நிலையத்திலிருந்து புறப்படும் ரயில், தர்மாவரம், அனந்த்பூர், கூடி, தோன், நந்தயால், கிட்டலுார், மர்காபுர்.நசரோபேட், குன்டூர், விஜயவாடா, துவட்டா, விஜியாநக்ரம், பெர்மாபுர், குர்தா சாலை, புவனேஸ்வர், பாலசோர், கரக்பூர் வழியாக ஹவுரா சென்றடையும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.