முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2021 04:07
புதுச்சேரி: முதலியார்பேட்டையை அடுத்த முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பகாசூரன் வதம், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. முக்கிய விழாவாக நேற்று படுகள நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடந்தது. விழவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். மாலை சுவாமி வீதி உலா நடந்தது.