Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » லிங்கோத்பவ பிரதிஷ்டை
படலம் 50: லிங்கோத்பவ பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
03:06

50 வது படலத்தில் லிங்கோத்பவ பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் லிங்கோத்பவரின் பிரதிஷ்டைகளை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. லிங்கோத்பவ அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு கர்ப்பக்கிரஹத்தை அனுசரித்து அதன் அளவுப்படி லிங்கம் வைத்து அதற்கு மத்தியில் சந்திரசேகர மூர்த்தி அமைப்பு முறையும் அவ்வாறே லிங்கத்திற்கு மேலும் கீழுமான பிரதேசத்தில் அன்னபட்சியையும் பன்றியையும் அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. இங்கு லிங்க மத்தியில் அமைத்த சந்திரசேகரரின் அமைப்பு முழங்காலிலிருந்து கீழ் பாகம் கண்ணுக்கு புலப்படாததாக ஆகும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு லிங்கத்தை அனுசரித்து இரண்டு பக்கங்களிலும் எல்லா அவயவமும் அழகுடன் கூடிய பிரம்மா விஷ்ணுவை நமஸ்கரித்து கொண்டு நின்ற கோலத்தில் உள்ளதாக அமைக்கவும் என்று கூறப்படுகிறது. இம்மாதிரியான தேவன் பிரம்மா விஷ்ணுவால் வணங்கப்பட்ட லிங்கோத்பவர் என்று கூறப்படுகிறது. பிறகு பிரம்மா விஷ்ணு இல்லாமல் அன்னமும் பன்றியும் மட்டும் உள்ளதாக அமைக்கலாம் என்று வேறு ஒரு விதி கூறுகிறது. பிறகு பிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு நல்ல காலத்தை பரிக்ஷித்து அங்குரார்ப்பணம் செய்து யாகத்திற்காக குண்டம் வேதிகையுடன் மண்டபத்தை முன்பு போல் அமைக்கவும். பிறகு நியாஸ கர்மா இல்லாமல் நயனோன்மீலனம் பேர சுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் வரையிலான கர்மாக்களை செய்யவும் என்று கர்மாவின் வரிசை முறை குறிப்பிடப்படுகிறது. பிறகு மண்டபத்தை அலங்கரித்து அங்கு வாஸ்து ஹோமம் முறையாக பூபரிக்ரஹ கர்மாவை செய்து வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி சயனம் கல்பித்து, ஜலத்திலிருந்து எடுத்து வந்த சுவாமியை முறைப்படி சுத்தி செய்து ரக்ஷõபந்தனம் செய்து, சயனத்தில் அதிவாசம் செய்யவும்.

இவ்வாறே பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் நயனோன்மீலனம் முதலான கர்மாவையும் முடித்து ஈஸ்வரனின் தென்பாகத்தில் பிரம்மாவையும், வடக்கு பாகத்தில் மஹாவிஷ்ணுவையும் சயனாதி வாசம் செய்யவும் வஸ்திரங்களால் பிரதிமைகளை போர்த் சந்தனம் முதலியவைகளால் பூஜிக்கவும் என்று சயன அதிவாசமுறை கூறப்படுகிறது. பிறகு ஈஸ்வரன் பிரம்மா விஷ்ணு இவர்களின் சசிரோ பாகத்தில் பிராதன கும்பங்களை ஸ்தாபிக்கவும். சிவகும்பத்திற்கு வடக்கில் வர்த்தினியை ஸ்தாபிக்கவும். பிறகு சுற்றிலும் வித்யேச்வரர் முதலிய கும்பங்களான 8 கும்பங்களை ஸ்தாபிக்கவும். முறைப்படி ரூப தியானத்தை சொல்லி பூஜிக்கவும். ஈஸ்வரனுக்கும் பிரம்மா விஷ்ணுவிற்கும்  தத்வ தத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும் என்று கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு ஆசாரியன் மூர்த்திபர்களுடன் செய்யவும் என கூறி ஹோம முறை திரவ்ய நிரூபண முறைப்படி சுருக்கமாக விளக்கப்படுகிறது. பிறகு இரவு பொழுதை கழித்து காலையில் சுத்தாத்மாவான ஆசாரியன் மூர்த்திபர்களுடன் கூடி பிம்பம், கும்பம், அக்னி இவைகளை பூஜிக்கவும். அந்த ஆச்சார்யர்களுக்கு தட்சிணை கொடுக்கவும் பின்பு முகூர்த்த நாழிகைக்கு முன்னதாக ஆசார்யன் மந்திர நியாஸம் செய்யவும் என கூறி மந்திரன்யாசம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது கும்பாபிஷேக முறையும் கூறப்படுகிறது. முடிவில் ஸ்நபநம் உத்ஸவத்துடன் கூடியதான பூஜையை செய்யவும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு பிம்பங்களின் ஸ்தாபன முறை கூறி இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொன்னபடி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறே லிங்கோத்பவ பிரதிஷ்டையை யார் செய்கிறானோ அவன் இவ்வுலகின் புத்தி உள்ளவனாக இருந்து முடிவில் சிவசாயுஜ்ய பதவி அடைகிறான் என்று வர்ணிக்கப்படுகிறது. இவ்வாறு 50வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லிங்கோத்பவருடைய பிரதிஷ்டையை முதலில் கூறுகிறேன். கர்பக்ருஹ அளவை அனுசரித்து லிங்கத்தை முன்பு கூறப்பட்ட முறைப்படி நன்கு அமைக்க வேண்டும்.

2. லிங்கத்தினுடைய உயரத்தில் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பாக அம்சத்தில் ஓரம்ச அளவு கீழே விட்டு இறக்க வேண்டும். அதே ஓரம்ச அளவோ, அல்லது அதில் பாதி அளவோ மேல் பாகமாக விட்டுவிட்டு அவைகளின் இடைவெளியில்

3. முன்பு கூறப்பட்ட அமைப்புமுறை சந்திர சேகர உருவத்தை நன்கு அமைக்க வேண்டும். லிங்கத்தின் கீழ்பாகத்தின் சந்திரசேகரின் முழந்தாளின் கீழுள்ள பாதத்தை கண்ணுக்கு புலப்படாதவாறு அமைக்க வேண்டும்.

4. லிங்கத்தின் மேல் கீழ்பாகம் முறையே, அன்னபக்ஷி, பன்றி ஆகிய இவற்றின் உருவ அமைப்பை அமைக்க வேண்டும். பிம்பத்தின் முக அளவிற்கு தக்கவாறும் பிம்பத்தை எதிர்நோக்கியும் அன்னப் பறவையை அமைக்க வேண்டும்.

5. பிம்பத்தை எதிர்நோக்காமல் பூமியை தோண்டுவது போல் பன்றி உருவத்தை அமைக்க வேண்டும். அந்த லிங்கத்தின் ஆறில் ஒரு பங்கு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பாகங்களினால்

6. பிரம்மா, விஷ்ணுவை இரண்டு பக்கங்களிலிருப்பதாகவும், வணக்கத்தை உடையதாகவும், அனுகூலமாக இருப்பதாகவும், குறுக்காக உள்ள பாதத்தை உடையதாகவும், எல்லா அவயங்களும் அழகாக உள்ளதாகவும்

7. பிரம்மா விஷ்ணுவால் வணங்கப்படுகிறவராயும், பிரம்மா விஷ்ணுவின்றி, அன்னம், பன்றியுடன் கூடியதாகவோ லிங்கோத்பவரின் அமைப்பு

8. இவ்வாறாக கூறப்பட்டுள்ளது. பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. பிரதிஷ்டையின் காலம் முன்பு போல் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறே, அங்குரார்பணத்தையும் செய்து

9. பிறகு மண்டப நிர்மாணம் செய்து, ஒன்பது, ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கைப்படி சுற்றிலும் நான்கோணம் அளவான குண்டங்களை அமைக்க வேண்டும்.

10. எண்கோணகுண்டம், வட்டவடிவமான குண்டங்களையோ அமைக்க வேண்டும். இந்த பிம்பத்திற்கு ரத்னந்யாஸம் தேவையில்லை. ரத்னந்யாஸம், பிம்பசுத்தி முதலியவைகளைச் செய்ய வேண்டும்.

11.கிராமபிரதட்சிணம், ஜலாதிவாசம், மண்ட பாலங்காரம், வாஸ்து ஹோமம் இவைகளைச் செய்ய வேண்டும்.

12. முதலிலோ அல்லது முன்கூறியபடியோ பூமியை ஏற்றுக் கொண்டு வேதிகையின் மேல் ஸ்தண்டிலம் அமைத்து சயனத்திற்கு வேண்டிய முறைகளை செய்ய வேண்டும்.

13. ஜலாதிவாஸத்திலிருந்து பிம்பத்தை எடுத்து பிம்பசுத்தியை செய்யவும். ரக்ஷõபந்தனம் செய்து சயனத்தின் மேல் பிம்பத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

14. நயனோன்மீலனம் முதலியவைகளை பிரும்மா விஷ்ணுவிற்கும் செய்ய வேண்டும். தெற்கு பாகத்தில் (வலது பாகத்தில்) பிரம்மாவையும், வடக்கில் (இடது பாகத்தில்) விஷ்ணுவையும் சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

15. வஸ்திரம் முதலியவைகளால் போர்த்தி சந்தனம் முதலியவைகளால் பூஜிக்கவும். பிம்பங்களின் தலைபாகத்தில் பிரதான கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

16. சிவகும்பத்தின் வடக்கு பாகத்தில் சிவ கும்பத்தை ஸ்தாபிக்கவும். வித்யேச்வர கும்பங்களாக எட்டு கடங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

17. முறைப்படி லிங்கோத்பவ மூர்த்தி அமைப்பாக ஹ்ருதயத்தில் ஆசார்யன் தியானித்து மூர்த்தீஸ்தாபன பாவங்களால் பூஜித்து

18. லிங்க மூர்த்தி, பிரம்மா, விஷ்ணு இவர்களுக்கு தத்வ தத்வேஸ்வர, மூர்த்தீ மூர்த்தீஸ்வர நியாஸங்களை முன்பு கூறியுள்ளபடி செய்ய வேண்டும்.

19. ஆசார்யன் மூர்த்திபர்களுடன் சேர்ந்து ஹோமம் செய்யவும். ஸமித், அன்னம், நெய், பொறி, எள், கடுகு, மூங்கிலரிசி இவைகளாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

20. கிழக்கு முதலான திசைகளில் புரசு, அத்தி, அரசு, இச்சி முதலிய ஸமித்துக்களையும், தென்கிழக்கு முதலான கோண திசைகளில் வன்னி, நாயுருவி, பில்வம், மயிற்கொன்னை ஆகிய ஸமித்துக்களையும்

21. பிரதான குண்டத்தில் புரசு சமித்தையும், அந்த புரசையே எல்லா குண்டத்திலும் ஹோமம் செய்து மேற்கூறிய திரவ்யங்களால் ஹோமம் செய்து பிரம்மாவையும், விஷ்ணுவையும்

22. ஸமித்து முதலிய பொருட்களால் பிரதான குண்டத்தில் ஆசார்யன் பூஜிக்கவும். மீதிப் பொழுதான இரவை போக்கி சுத்தமான அதிகாலையில்

23. சுத்தமான மனதை உடைய ஆசார்யன் தத்வமறிந்தவனாக மூர்த்திபர்களுடன் கூடி பிம்பம், குண்டம், குண்டத்திலுள்ள அக்னி இவைகளை பூஜித்து

24. ஆசார்யர்களை பூஜித்து தட்சிணையைக் கொடுக்க வேண்டும். பிரதிஷ்டா முஹூர்த்த ஸமயத்தின் ஓர் நாழிகைக்கு முன்பாக மந்திரநியாஸம் செய்ய வேண்டும். வேதிகையிலிருந்து கும்பங்களை எடுத்து மூர்த்திக்கு முன்பாக ஸ்தண்டிலத்தில் வைக்க வேண்டும்.

25. சிவகும்பத்திலிருந்து மந்திர பீஜத்தை எடுத்து தேவனின் ஹ்ருதயத்தில் சேர்த்து, வர்த்தநீ கடத்திலிருந்து வர்த்தநீ பீஜமந்திரத்தை எடுத்து பாத தேசத்தில் சேர்த்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

26. வித்யேச கும்பத்திலிருந்து அவ்வாறே மந்திரங்களை எடுத்து சேர்பித்து ஈசனை அந்த ஜலங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிரம்மவிஷ்ணு இவர்களின் பீஜமந்திரத்தை வைத்து அவர்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

27. ஸ்நபன பூஜைசெய்து அபிஷேகம் செய்து முடிவில் திருவிழா நடத்தவும் பிம்பங்களை பிறகு ஸ்தாபிக்க வேண்டும். ஸ்வாமிக்கு தெற்கு பாகத்தில் பிரும்மாவையும் (வலது)

28. வடக்கில் (ஸ்வாமிக்கு இடது) பாகத்தில் மஹாவிஷ்ணுவை ஸ்தாபிக்க வேண்டும். இங்கு கூறப்படாததை பொதுவான பிம்ப ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டும்.

29. எந்த மனிதன் மேற்கூறியவாறு லிங்கோத்பவ பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் இவ்வுலகில் பெரிய தனவானாகி முடிவில் சிவஸாயுஜ்ய பதவியை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் லிங்கோத்பவ பிரதிஷ்டா முறையாகிற ஐம்பதாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar