பதிவு செய்த நாள்
05
ஜூலை
2021
06:07
அவிநாசி: நாயன்மார்களால் பாடல் பெற்றதும், பழமை வாய்ந்ததுமான அவிநாசி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், இரண்டு மாத இடைவெளிக்குப்பின் திறக்கப்பட்டது.
அதிகாலையில், கோவில் நடை திறக்கப்பட்டு, கால பூஜைகளை சிவாச்சாரியார்கள் மட்டும் மேற்கொண்டனர். தொடர்ந்து, அதிகாலை, 5:30 மணி முதல், பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மாத இடைவெளிக்குப்பின், வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன், ஆர்வம் மேலிட சுவாமி தரிசனம் செய்தனர். முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே, கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் வளாகத்தில், பக்தர்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது. குழந்தைகள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மதியம் ஒரு மணி வரையும், மீண்டும் மாலை, 4:30 மணி முதல், 8:00 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவர் என கோவிலில் நிர்வாகத்தினர் கூறினர். அர்ச்சனை செய்வது, பிரசாதங்கள் வழங்குவது தடை செய்யப்பட்டிருந்தது.