கோவை: பேரூராதீனத்தில் பாலசித்தர் குருபூஜை பெருவிழாவும், ஆனித்திருவாதிரைத் திருவிழாவும் நேற்று நடந்தன.ஆனி மாதம் அமாவாசை திதியும், திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து ஒரே நாளில் வருவது விசேஷம். இந்நாளில் சிவபெருமானுக்கு வழிபாடு செய்தால், நோய் எதிர்ப்பாற்றல் பெற்று நோய்தொற்றிலிருந்து, மக்கள் எளிதாக விடுபடுவர்; மக்கள் சுபிட்சம் அடைவர் என்பது நம்பிக்கை.நேற்று பேரூராதீனத்தில், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவாசகம் பாராயணம் செய்யப்பட்டன. இணையம் வாயிலாக, மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள், திருமட ஆதீனகர்த்தர்கள் பாராாயணம் மற்றும் பண் இசைத்தனர்.இணையம் வாயிலாக பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் இணைந்து, வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார்.