பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
02:07
ராய்ச்சூர் : கல்யாணி சாளுக்கிய வம்சத்தை சேர்ந்த ஆறாம் விக்ரமாதித்யா ஆட்சி காலத்தில், 1,106ல் பொறிக்கப்பட்ட, கல்வெட்டு, ராய்ச்சூரின் மஸ்கியில் கண்டுபிடிக்கப்பட்டது.ராய்ச்சூர் மாவட்டம், மஸ்கி தாலுகா, திக்கநாயகன கிராமத்தை சேர்ந்த விவசாயி யமனகவுடா. இவரது நிலத்தில் பெரிய பாறை உள்ளது.
அதில் மன்னர் காலத்தின் பழங்கால எழுத்துகள் கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. இதையறிந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் சென்னபசப்பா மல்குந்தினி, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பழைய கன்னடத்தில் எழுதப்பட்ட, 28 எழுத்துக்கள் பாறையில் பொறிக்கப் பட்டுள்ளன. எழுத்துக்களின் மேல் பகுதியில், காளி முகம் கொண்ட ஈஸ்வரன் லிங்கத்துக்கு பூஜை செய்வதும், அதன் அருகில் பசு ஒன்று, தனது குட்டிக்கு பாலுாட்டுவது போன்று செதுக்கப்பட்டுள்ளன.இந்த எழுத்துக்கள், கல்யாணி சாளுக்கிய வம்சத்தின் ஆறாம் விக்ரமாதித்யாவுக்கு சேர்ந்தது என்றும், 1,106ல் பொறிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.இதுபோல, உஸ்கிஹாலா கிராமத்தின் கங்கம்மா பாதா அருகில் உள்ள மற்றொரு பாறையில், 18 ம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட ஐந்து கன்னட எழுத்துகள் உள்ளன.இதையறிந்த சுற்று வட்டார கிராமத்தினர் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.