பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
02:07
பல்லடம்:கிராம தேவதை வழிபாடுகளை தடையின்றி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும், என, காமாட்சிபுரி ஆதீனம் வலியுறுத்தி உள்ளார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் சித்தம்பலத்தில், நேற்று நடந்த, அமாவாசை வழிபாட்டில் பங்கேற்ற பின், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:தொற்று பரவலை தடுக்க பணியாற்றிய அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும்; வரலாற்று சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற கோவில்கள், நீண்ட நாளாக மூடப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளன.நாட்டில் தொழில், கல்வி, மழை வளம் செழிக்கவும்,விவசாயம் மேலோங்கி பஞ்சம் என்ற நிலை ஏற்படாமல் இருக்கவும், கிராம தேவதைகள் வழிபாடு முக்கியமானது. நம் முன்னோர் கிராம தேவதை வழிபாடுகளை தவறாமல் செய்து வந்தனர். ஆனால், இன்று திருவிழாக்கள், பண்டிகைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கிராம தேவதை வழிபாடுகள், விழாக்கள் வழக்கம் போல் நடக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றி, பொதுமக்கள், கோவில்களில் வழிபட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.