பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
04:07
தஞ்சாவூர், திருவையாறு அருகே பெரும்புலியூர் கிராமத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலத்தில் உள்ள வாராஹி அம்மன் சன்னதியில், ஆஷாட நவராத்திரி விழா நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான சவுந்தரநாயகி சமேத வியாக்கிர புரீஸ்வரர் கோவிலில், மேற்கு நோக்கி அமைந்துள்ள வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று, வாராஹி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர் தேன், மஞ்சள் போன்ற திரவிய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனை நடைபெற்றது. அதைசமயம், உலக மக்கள் கொரானா நோயிலிருந்து விடுபடவும் தொல்லைகள் இல்லாமல் இருக்கவும், விபத்துக்கள் விலகவும், தொழில் அபிவிருத்தி ஏற்படவும் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு, பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவானது வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுரேஷ் சிவாச்சாரியார், துரைராஜன் சிவாச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.