ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் நிலங்களில் போர்டுகள் ஆக்கிரமிப்பு தவிர்க்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2021 06:07
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தவிர்க்கும் பொருட்டு நிலங்களை கண்டறிந்து கல் ஊன்றி போர்டுகளை வைக்கும் பணியை கோயில் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமாக உள்ளூர், செண்பகத்தோப்பு, மம்சாபுரம், வன்னியம்பட்டி, படிக்காசு வைத்தான்பட்டி உள்ளிட்ட பல் வேறு இடங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு குத்தகைதாரர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். குத்தகை எடுத்தவர்களில் சிலர் உள்வாடகை, பிறருக்கு கை மாற்றுதல் போன்ற செயல்களை நிர்வாகத்திற்கு தெரியாமலே செய்வதால், செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் நிலங்களை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலையடிவார பகுதியில் 250 ஏக்கர் நிலம் இருந்தாலும் அவற்றை முறையாக அளவீடு செய்து கம்பி வேலி அமைக்கவில்லை. இருந்தபோதிலும் அங்கு கோயில் சொத்து என குறிப்பிட்டு போர்டு வைத்து கோவிலுக்கு உரிய நிலங்களை காப்பாற்றும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 30-க்கு மேற்பட்ட இடங்களில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கண்டறிந்து போர்டுகளை வைத்துள்ளனர்.நிலங்களில் போர்டுகள் மட்டுமில்லாமல் நிலங்களை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும்.அப்போதுதான் கோயில் நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்ற முடியும் என்கின்றனர் பக்தர்கள்.