திருப்புவனம்: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஏழு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடக்கிறது. கல் உழவு கருவி, மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்து உள்ளன.மேலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட 44 செ.மீ., உயரம், 77 செ.மீ., சுற்றளவு கொண்ட தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. கலையம்சம், பிடிமானத்திற்காக தொட்டியின் வெளிப்புறம் கை விரல்களால் அழுத்தப்பட்ட வரிகள் காணப்படுகின்றன.கீழடி தொழில் சார்ந்த நகரம் என்பதற்கான சான்று ஏற்கனவே கிடைத்த நிலையில் தொட்டி போன்ற அமைப்பு கிடைத்துள்ளது, அதற்கான மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.