பதிவு செய்த நாள்
14
ஜூலை
2021
05:07
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரமோற்சவ (தட்சிணாயன புண்ணிய காலம்) எட்டாம் நாள் காலை உற்சாவத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் காலமான தட்சணாயன புண்ணிய காலத்தில், ஆனி பிரமோற்சவ விழா 7 ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தொடர்ந்து, 10 நாட்களுக்கு, தினமும் சுவாமி, அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை, ஐந்தாம் பிரகாரத்தில், சுவாமி அம்மன் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும். எட்டாம் நாள் காலை உற்சாவத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா நிறைவு நாளன்று அய்யங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடக்கும்.