பதிவு செய்த நாள்
16
ஜூலை
2021
12:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆனி உத்திரத்தையொட்டி சிவகாமி சமேத நடராஜருக்கு அதிகாலையில் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி சமேத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது. சிவபுாரணம் படிக்கப்பட்டு, வேதபாராயணத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி சன்னதியில், ஆனி உத்திர தரிசனத்தையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், தொடர்ந்து அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போல், வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலிலும், ஆனி உத்திர தரிசனத்தையொட்டி, நேற்று காலை சிறப்பு பூஜைகளும், அலங்காரவழிபாடும் நடந்தது.